முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்! நேரலை

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் பற்றி...

அமைச்சரவை பதவியேற்பு விழா - TNDIPR
பகிர்:
Updated On : 21 மே 2026, 9:38 am IST

மேலும் 3 பெண்கள்

தமிழ்நாடு அமைச்சரவையில் ஏற்கெனவே கீர்த்தனா இடம்பெற்றிருக்கும் நிலையில், மேலும் 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Updated On : 21 மே 2026, 9:38 am IST

அமைச்சராகும் தனபால் மகன்

தமிழ்நாட்டின் முன்னாள் பேரவைத் தலைவரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளார்.

Advertisement

Advertisement

ராசிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றிருந்தார்.

Updated On : 21 மே 2026, 9:38 am IST

59 ஆண்டுகளுக்குப் பிறகு

தமிழ்நாடு அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ ஆன ராஜேஷ் குமாா், மேலூா் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்கவுள்ளனர்.

Updated On : 21 மே 2026, 9:38 am IST

23 அமைச்சர்கள்

புதிதாக பதவியேற்கவுள்ள 23 அமைச்சர்களின் பட்டியலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத், மத்திய அமைச்சர் எல். முருகனை அவிநாசியில் தோற்கடித்த இளம் எம்.எல்.ஏ. கமலி உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மே 2026, 9:28 am IST

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், கடந்த 10 ஆம் தேதி முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.