தவெக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்
தமிழகத்தில் தவெக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தது குறித்து...
தமிழகத்தில் தவெக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 10 ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அவரோடு ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில் அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், அமைச்சரவையை விரிவாக்கி கூட்டணி கட்சிகளுக்கும் பதவிகளை ஒதுக்கி ஏற்கெனவே பதவியேற்றவர்கள் அல்லாமல் 23 அமைச்சர்கள் புதிதாக இன்று பதவியேற்றனர். அதில், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
Advertisement
Advertisement
இதன்மூலம், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சா்களாக இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
முதல்வர் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்துக்கும், முயற்சிக்கும் காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் வழங்கும். தமிழகத்தில் தவெக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.
காமராஜர், கக்கன் போன்ற கொள்கைத் தலைவர்களின் வழியில் நின்று நேர்மையான அரசியலை வழங்குவது எங்களின் நோக்கம் ஆகும். அத்தகைய நேர்மையான ஆட்சியை வழங்க உறுதி எடுத்துள்ளோம்.
நீட் தேர்வு குறித்து பார்க்கும்போது, எங்கள் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கைக்கு நானும் ஆதரவு அளிக்கிறேன். தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பாக, 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொது தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகும் பெருமையையும் விஸ்வநாதன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Congress Minister Viswanathan stated on Thursday that the TVK would complete five years in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.