கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது: தமிழிசை
கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது... மிருகங்களால் எத்தனை பூக்கள் கசக்கி வீசப்பட போகின்றனவோ... இப்பொழுது தமிழகத்தில் சென்ற ஆட்சியில் நடந்த அவலங்களின் தொடர்ச்சியாக இன்று நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்...
ஆக பெண்களின் பாதுகாப்பில் குழந்தைகளின் பாதுகாப்பில் தீவிர நடவடிக்கை என்பதை விட போர்க்கால நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது... காவல்துறையும் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண்கள் படையும் எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற போர்க்கால நடவடிக்கை தேவை...
Advertisement
Advertisement
ஒரு போரின் தீவிரத் தன்மையும் தேவை... இன்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது கோவை பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல பெண்ணை பெற்றோர் ஒவ்வொருவரும் கூட.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"The cruelty inflicted on a 10-year-old girl in Coimbatore has shaken humanity itself, stated former BJP State President Tamilisai Soundararajan."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.