முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது, மெரினாவில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் அவதி.

மேக மூட்டம் - Center-Center-Chennai
பகிர்:

சென்னையில் கடந்த மூன்று நாள்களாக வெய்யில் கொளுத்திவந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு சில நாள்களாக 107 டிகிரி அளவுக்கு வெப்பம் வாட்டி வந்தது. ஆனால் இன்று காலை 7 மணிக்கு வழக்கம் போல உக்கிரத்துடன் உதிக்க வேண்டிய சூரியன் சற்று ஓய்வு எடுப்பது போல தோன்றியது.

இதனால், கடந்த 3 நாள்களாக வெப்பத்தில் வாடிய மக்கள் இன்றாவது வெய்யிலிருந்து விடுதலை கிடைக்காதா என்ற எதிர்பார்ப்புடன் தங்களது அன்றாடப் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, இன்று காலை 7 மணியளவில் திடீரென பல இடங்களில் சூறைக்காற்று வீசியது.

சென்னை மெரினா கடற்கரையில் சூறைக்காற்று வீசியதால் புழுதிப் புயல் ஏற்படும் நிலை உருவானது. இதனால், ஏதேனும் அசம்பாவிதம் நேரிடுமோ என்ற முன்னெச்சரிக்கைக்காக, சென்னை மெரினா கடற்கரையில் காலை வேளையை அனுபவிக்கச் சென்றவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments