முகப்பு
தமிழ்நாடு

எந்தக் குழந்தைகளை வைத்து வாக்கு சேகரித்தீர்களோ, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை! இபிஎஸ்

சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்...

முதல்வர் விஜய் - எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்
பகிர்:

சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, பாலியல் தொல்லை அளித்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

Advertisement

Advertisement

"சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர், சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை, மிகுந்த அச்சமூட்டுகிறது.

முதல்வரே, எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.

வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

children does not have safety in tamilnadu: EPS questions CM vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.