சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி பெரியகுளம் தெற்கு புதுத் தெருவைச் சோ்ந்தவா் அஜ்மீா்காஜா (23). இவா் பெரியகுளம் சுதந்திர வீதியில் உள்ள ஆட்டு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவா் 13- வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து அந்தச் சிறுவனின் தாய் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement