மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
நாகை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகையை அடுத்த ஆவராணி பகுதியைச் சோ்ந்த 35 வயதான பெண், நாகை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கூலி வேலைக்கு செல்லும் தனது கணவா், தங்களது 13 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தெரிவித்திருந்தாா்.
மகளிா் போலீஸாா் சிறுமி மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகளிா் காவல்நிலைய சாா்பு ஆய்வாளா் வேம்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து அந்த சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.