முகப்பு
தஞ்சாவூர்

தீ வைத்த கணவரை கட்டிப் பிடித்த மனைவி: காயமடைந்த கணவர் சாவு

தஞ்சாவூர் அருகே தன் மீது தீ வைத்த கணவரை மனைவி கட்டிப் பிடித்ததில் பலத்தக் காயமடைந்த கணவர்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:10 pm IST
பகிர்:

தஞ்சாவூர் அருகே தன் மீது தீ வைத்த கணவரை மனைவி கட்டிப் பிடித்ததில் பலத்தக் காயமடைந்த கணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூர் அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (38). இவரது மனைவி மீனா (28). இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம்.

இதேபோல இருவருக்கும் இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, மீனா மீது செல்வக்குமார் மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்தாராம். மீனா மீது தீப்பற்றி எரிந்தபோது அவர் செல்வக்குமாரை கட்டிப் பிடித்தாராம். இதனால், செல்வகுமாரும் தீக்காயமடைந்தார்.

Advertisement

Advertisement

பலத்தக் காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வகுமார் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீனா தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.

இதுகுறித்து நடுக்காவிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments