பூம்புகார் நிறுவனத்தில் கிருஷ்ண தரிசனக் கண்காட்சி
கும்பகோணத்தில் பூம்புகார் நிறுவனம் சார்பில் கிருஷ்ணா தரிசனக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை மாலை
கும்பகோணத்தில் பூம்புகார் நிறுவனம் சார்பில் கிருஷ்ணா தரிசனக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்டது.
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலைய உள் வளாகத்தில் இதற்கான கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆக. 20-ம் தேதி மாலை தொடங்கி வரும் 31-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பூம்புகார் நிறுவனத்தின் உதவி மேலாளர் மைனாவதி கூறியது:
Advertisement
Advertisement
இக் கண்காட்சியில் பஞ்சலோகம், மண், பேப்பர் கூழ், பித்தளை, மார்பிள் பவுடர், அலாய் மெட்டல் போன்ற மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆழிலைகிருஷ்ணர், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், ராதாகிருஷ்ணர், ஊஞ்சல் கிருஷ்ணர் உள்ளிட்ட பல சிலைகளும், நூக்க மர பேனல்கள், எண்ணற்ற கலைநயமிக்க பரிசுப் பொருட்கள், உயர்தர பித்தளை விளக்குகள், தஞ்சை கலை தட்டுகள், பூஜைப் பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், நெட்டி மாடல்கள், மொராதாபாத் பித்தளை பரிசுப் பொருட்கள், ஐம்பொன் நகை வகைகள், தங்க முலாம் நகைகள், முத்து, பவள மாலைகள், ஸ்படிக மாலைகள், ருத்திராட்சம், நவரத்தின மாலைகளும் விற்பனைக்கு உள்ளன.
ரூ. 50 முதல் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலான பரிசு பொருட்கள் கண்காட்சிக்கும், விற்பனைக்கும் உள்ளன. இதில் 3 இஞ்ச் முதல் மூன்றடி வரை உயரம் உள்ள கிருஷ்ணர் சிலைகள் உள்ளன. கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூ. 1 லட்சம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.