பேராவூரணியில் சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்: ஒன்றியக் கூட்டத்தில் வலியுறுத்தல்
பேராவூரணி பகுதிகளில் சாலைப் பணிகளை முடிக்க வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேராவூரணி பகுதிகளில் சாலைப் பணிகளை முடிக்க வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவர் சாந்திஅசோக்குமார் தலைமையில், ஒன்றிய ஆணையர்கள் சு. ராஜசேகர், வி. அரசுமணி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
Advertisement
Advertisement
சரோஜா (உறுப்பினர்): என் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைப் பணிகள் பல மாதங்களாக முடிக்கப்படாமல் உள்ளன. ஒரு வேலையை செய்து முடிக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளலாம்?
ராஜசேகர் (ஆணையர்): சாலைப் பணியாக இருந்தால் 60 நாட்களும், கட்டடப் பணியாக இருந்தால் 90 நாட்களிலும் முடிக்க வேண்டும்.
சரோஜா: டெண்டர் எடுக்கப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகியும் வேலை நடைபெறவில்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்தக்காரரிடம் கொடுத்து வேலையை முடிக்க வேண்டும்.
ஆணையர்: முறைப்படி அறிவிப்பு கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கருணாநிதி (உறுப்பினர்): சித்தாதிக்காடு இணைப்புச் சாலை எந்த நிலையில் உள்ளது.
ஆணையர்: மதிப்பீட்டுத் தொகை அதிகம் என்பதால் அரசிடம் அனுமதி பெற்று டெண்டர் விடப்பட்டபின் சாலைப்பணி நடைபெறும்.
கருணாநிதி: திருமண உதவித்தொகை பெற திருமணத்திற்கு முன்பே முறைப்படி விண்ணப்பித்தும், நீண்ட நாள்களாக உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பது ஏன்?
சாந்திஅசோக்குமார் (தலைவர்): முறையாக விண்ணப்பித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவித்தொகை கிடைக்கும்.
ராமமூர்த்தி (உறுப்பினர்): செருவாவிடுதி பாலம் கட்ட இடத்தைப் பார்வையிட்ட பிறகு எந்த வேலையும் நடைபெறவில்லை. பாலம் கட்டும் பணி என்னவாயிற்று?
ஆணையர்: அப்பகுதியில் 3 பாலங்கள் கட்டப்பட வேண்டும். அதற்கான அனுமதி மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்டு, டெண்டர் விட்டு வேலை தொடங்கப்படும்.
கருணாநிதி: இந்த மன்றத்தில் கடந்தாண்டிலிருந்து நான் வைத்த கோரிக்கைகளில் உள்ளிக்குளம் துர்வாரப்படவில்லை, மாயம்பெருமாள் கோவில் சாலை மராமத்து பணி நடைபெறவில்லை. எந்தப் பணியும் நடைபெறாமல் டீசல் போட்ட கணக்கு மட்டும் வைக்கப்படுகிறது என்றார்.
கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக் கவுன்சிலர் குழ. செ. அருள்நம்பி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ். நீலகண்டன், ப. ஜெய்சங்கர், முத்துராமலிங்கம், ப. ராஜகுமாரி, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.