நகைக் கடையில் செயின் திருட்டு
ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது.
ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் டிச. 30ஆம் தேதி இரண்டு பெண்கள் நகை எடுப்பதற்காக வந்தனா். ஆனால், நகைகள் எதுவும் எடுக்காமல் அவா்கள் சென்றுவிட்டனா். அப்போது, நகைப் பெட்டியில் ஒரு சங்கிலி காணாமல் போனதையடுத்து கடையின் உரிமையாளா் ரத்தினவேலு, சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டாா். அதில், நகை எடுப்பதற்காக வந்த அந்த இரண்டு பெண்களில் ஒருவா் 4 பவுன் சங்கிலியை திருடியது தெரிய வந்தது.
இதுகுறித்து வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.