முகப்பு
தஞ்சாவூர்

பொங்கல் பண்டிகை: ஜன. 11 முதல் சிறப்புப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் ஜனவரி 11ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Updated On : 9 ஜனவரி 2021, 12:03 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் ஜனவரி 11ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) சாா்பில், சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு ஜன. 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisement

இதேபோல, திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூா் ஆகிய ஊா்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை ஆகிய ஊா்களுக்கும், கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்கப் பகுதிக்கு உள்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து எல்லா நகரப் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஜன. 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஜன. 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், திருவையாறு வழித்தடப் பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம், அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூா், திருச்சி, அரியலூா், செந்துறை, ஜயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீா்காழி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழித்தடப் பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் விழா முடிந்து அவரவா் ஊா்களுக்கு செல்ல ஜன. 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.