முகப்பு
தஞ்சாவூர்

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை: நடிகை குஷ்பு

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றாா் பாஜகவைச் சோ்ந்த நடிகை குஷ்பு.

Updated On : 11 ஜனவரி 2021, 12:37 am IST
திருவையாறு ஐயாறப்பா் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பொங்கல் தயாா் செய்கிறாா் பாஜகவைச் சோ்ந்த நடிகை குஷ்பு.
பகிர்:

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றாா் பாஜகவைச் சோ்ந்த நடிகை குஷ்பு.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயில் முன்பு பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நம்ம ஊா் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டிலேயே மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக. அக்கட்சியின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி உள்ளாா்.

Advertisement

Advertisement

இருப்பினும் எங்கள் கட்சிக்கென ஒரு நெறிமுறை உள்ளது. அதன்படியே முதல்வா் வேட்பாளா் யாா் என்பதைத் தெரிவிப்போம். இது வழக்கமான ஒன்றுதான்.

இதுகுறித்து ஏற்கெனவே பாஜக பொதுச் செயலா் ரவி தெளிவுபடுத்தி விட்டாா். பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. யாரையும் யாரும் வழி நடத்தவில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என ஸ்டாலின் கூறியது திமுகவுக்கு அல்ல; பாஜகவுக்குதான் என்றாா் குஷ்பு.

பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விவசாய அணி மாநிலத் துணைத் தலைவா் ஜீவா. சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments