முகப்பு
தமிழ்நாடு

களைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!

மருத்துவமனை, விளையாட்டு அரங்கம் என களைகட்டப்போகிறது முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி

Updated On : 2 ஜூலை 2026, 3:31 pm IST
பெரம்பூர் ரயில் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

புதிய விளையாட்டு அரங்கம், மூன்று மாடிக் கட்டடங்களைக் கொண்ட மருத்துவமனை, உணவுப் பூங்கா என பெரம்பூர் தொகுதியில் அமையவிருக்கும் புதிய அமைப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜோசப் விஜய் தொகுதியான பெரம்பூரில் அமையவிருக்கும் இந்த வசதிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையம் மூலம், பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி ஒதுக்கும் நிதி, முதல்வரின் சிறப்பு நிதி, மாநில அரசு ஒதுக்கும் நிதி மற்றும் வெளிநாட்டு வங்கிகளிலிருந்து பெறும் நிதிகள் மூலம், இந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்பில், பெரம்பூரில் நவீன விளையாட்டு அரங்கம், மருத்துவமனை, உணவுப் பூங்கா போன்றவை அமையவிருக்கின்றனவாம்.

கிரிக்கெட் அரங்கம், பாட்மிண்டன், கைப்பந்து, கால்பந்து அரங்கங்களுடன் , ஜிஎன்டி சாலைக்கு அருகே ஆறு ஏக்கர் பரப்பளவில் இந்த மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் அமையவிருக்கிறது.

இதற்காக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான காலி இடங்கள் ஏதேனும் பெரம்பூர் தொகுதியில் இருக்கிறதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

எம்கேபி நகர், வடக்கு அவென்யூ சாலையில் உணவுப்பூங்கா அமைக்கவும் சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்திருக்கிறது.

சத்தியமூர்த்திநகர் பகுதில் உள்நோயாளிகள் அனுமதி பிரிவு உள்பட மூன்று மாடிகளைக் கொண்ட மருத்துவமனை அமையவிருக்கிறது. தற்போது, பெரம்பூர் மக்கள் பெரியார் நகர் மருத்துவமனையைத்தான் நாடி வருகிறார்கள். அதுபோல, வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் மருத்துவமனைகளும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

summary

Chief Minister Vijay's Perambur constituency set to come alive!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments