அரசு வழக்குரைஞர் நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம்! அமைச்சர் என்.ஆனந்த் மீது வழக்கு
அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமைச்சர் என். ஆனந்த் மீது வழக்குரைஞர் ஞானசௌந்தரி வழக்கு
அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக அமைச்சர் என். ஆனந்த் மீது வழக்குரைஞர் ஞானசௌந்தரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசு வழக்குரைஞருக்கான விண்ணப்பத் தேதியின் கெடு ஜூன் 29 என்று தவெக அரசு அறிவித்த நிலையில், அன்றைய நாளே இறுதிப் பட்டியல் வெளியானதாக விழுப்புரம் சாலமேட்டை சேர்ந்த தவெக வழக்குரைஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஓர் அரசு வழக்குரைஞர் நியமனத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையில் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளின் வழக்குரைஞர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்படுவதாகவும், அமைச்சரும் தவெக பொதுச் செயலாளருமான என். ஆனந்த் பரிந்துரையில் தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியரும் கூட்டு சேர்ந்து வழக்குரைஞர் நியமனம் நடத்துவதாக ஞானசௌந்தரி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
தவெக ஆட்சியில் லஞ்சம், ஊழலை அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் விஜய் கூறும்நிலையில், அரசு வழக்குரைஞர் நியமனத்தில் சட்டத்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஞானசௌந்தரி புகார் அளித்துள்ளார். மேலும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது என்றும் அவர் மனுவில தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த அரசு வழக்குரைஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அதுவரையில் முன்னர் வெளியான அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் ஞானசௌந்தரி கோரியுள்ளார்.
Case filed against Minister N. Anand for Rs. 30 lakh bribe regarding the appointment of a government counsel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.