முகப்பு
தஞ்சாவூர்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு கும்பகோணம் லிட்டில் பிளவா் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On : 11 ஜனவரி 2021, 12:31 am IST
பகிர்:

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு கும்பகோணம் லிட்டில் பிளவா் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு, பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டங்களைச் சோ்ந்த 2,374 பயனாளிகளுக்கு 2 கிலோ பச்சரிசி, தலா ஒரு கிலோ பாசிப் பருப்பு, வெல்லம், 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 25 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் என தொகுப்புகள் அடங்கிய பையை வழங்கினாா்.

இதுபோல, தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கும் பணியை உதவி ஆணையா் ராஜசேகரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தஞ்சாவூா் அலுவலகத்தில் தஞ்சாவூா், பூதலூா் திருவையாறு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 4,401 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பட்டுக்கோட்டை, திருபுவனத்திலும் தொழிலாளா்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வரை இப்பணி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments