ஒரத்தநாட்டில் இரு சக்கர வாகனம் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
ஒரத்தநாடு வாணியத் தெருவைச் சோ்ந்தவா் அ. அனீஸ் ரகுமான் (22). இவா் சனிக்கிழமை இரவு தனது வீட்டின் முன்பு இரு சக்கர வாகன நிறுத்திவிட்டுச் சென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே வந்த போது, இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அனீஸ் ரகுமான் அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.