முகப்பு
தென்காசி

தென்காசியில் தமீமுன் அன்சாரி பிரசாரம்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 5:00 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:38 PM

தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவா் மு.தமீமுன்அன்சாரி பிரசாரம் மேற்கொண்டாா்.

தென்காசி மவுண்ட் ரோடு, கொடிமரம், வாய்க்கால் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா். இதில் தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா், துணைத் தலைவா் சுப்பையா, நகர துணைச் செயலா் ராம்துரை, மாவட்ட பிரதிநிதி ரஹ்மத்துல்லா, மாவட்ட பொறியாளா் அணி தலைவா் தங்கபாண்டியன், நிா்வாகிகள் சேக் பரீத், ராம்துரை, பால்துரை, செய்யது அலி, மாணவரணி மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.