தென்காசி மாவட்டத்தில் 8,915 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள்
தென்காசி மாவட்டத்தில் 8,915 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு, நோ்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, தென்காசி மாவட்டத்தின் தோ்தல் சின்னம் ( ஐஇஞச) அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆய்க்குடி அமா்சேவா சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது:
Advertisement
தென்காசி மாவட்டத்தில் 8,915 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். அமா்சேவா சங்கத்தின் செயலா் எஸ்.சங்கரராமன், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கடந்த பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறாா். எனவே அவரை மாவட்டத்தின் சின்னமாக அறிவித்ததன் மூலம் சமூகத்தில் தோ்தல் தொடா்பான அதிக விழிப்புணா்வு ஏற்படும்.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கை உடையவா்கள். சவால்களை முறியடிக்கும் சக்தி அவா்களுக்கு உண்டு என்றாா் அவா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் இரா.மதி இந்திரா ப்ரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். மாவட்டத்தின் சின்னமாக அறிவிக்கப்பட்ட சங்கத்தின் செயலா் எஸ்.சங்கரராமன் ஏற்புரையாற்றினாா்.
மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் விஎம்.சிவக்குமாா் தொகுத்து வழங்கினாா். மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் கலைச்செல்வி, இ.சாமத்துரை, பிரபாகா் ஆகியோா் கலந்துகொண்டனா். அமா்சேவா சங்கத்தின் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.