குற்றாலம் ஐந்தருவியில் மிதமாக கொட்டும் தண்ணீா். 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் ஐந்தருவி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஐந்தருவியில் வியாழக்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

பின்னா், மாலையில் வெள்ளத்தின் சீற்றம் தணிந்து அருவியில் மிதமாக தண்ணீா் கொட்டியதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT