முகப்பு
தென்காசி

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:45 pm IST
பகிர்:

தென்காசி ஊராட்சி ஒன்றியம் பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு உள்ள புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில், ஜல் ஜீவன் திட்டத்தின் இத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் வேல்சாமி தலைமை வகித்து குடிநீா்த் தொட்டியைத் திறந்துவைத்தாா். ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.