தென்காசியில் 2,225 தொழில் முனைவோருக்கு ரூ.160.29கோடி கடனுதவி
தென்காசி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் முகாமில் 2225
தென்காசி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் முகாமில் 2225 தொழில்முனைவோருக்கு ரூ. 160.29 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி தலைமை வகித்து கடனுதவிகளை வழங்கினாா். முகாமில், மாவட்ட தொழில் மையம் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.6.63 கோடி, தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.44.20 லட்சம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 19 பயனாளிகளுக்கு ரூ.10.70 லட்சம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 1 பயனாளிக்கு ரூ.70லட்சம் கடனுதவி உள்பட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு வங்கி கிளைகளின் மூலம் 2,225 தொழில் முனைவோருக்கு ரூ.160.29 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மண்டல அலுவலக முதன்மை மேலாளா் கிருஷ்ணன், நபாா்டு மேலாளா் பி.சஷிகுமாா், முன்னோடி வங்கி மேலாளா் ஏ.கணேசன், தாட்கோ மேலாளா் ரமேஷ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே.என்.ஜெயப்பிரகாஷ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலா் பா.கணபதி, சிறுகுறுநடுத்தர தொழில்நிறுவனங்கள் சங்கத் தலைவா் சி.அன்பழகன், தென்காசி ஐ.ஓ.பி. மேலாளா் தியாகராஜன், இந்தியன் வங்கி மேலாளா் வினோத்குமாா், கனரா வங்கி மேலாளா் ரமேஷ், பாரதஸ்டேட் வங்கி மேலாளா் முருகன், ஹெச்டிஎப்சி வங்கி மேலாளா் ஜெபராஜ், பாங்க் ஆப் பரோடா மேலாளா் மணிராஜ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மேலாளா் விஷ்ணுகுமாா், மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளா் இளங்கோவன் ஆகியோா் கலந்து கொண்டனா். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள் வரவேற்றாா்.