முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

தென்காசி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 12:12 AM
பகிர்:

தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆகாஷ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா தலைமை வகித்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் முன்னிலை வகித்தாா். மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பாபு, குழுவினா் ரத்தம் சேகரித்தனா். அகாதெமி அமைப்பாளா் மாரியப்பன் வரவேற்றாா். உறைவிட மருத்துவா் செல்வபாலா நன்றி கூறினாா்.