தென்காசி

பழையகுற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

Din

பழையகுற்றாலம் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்.

தென்காசி,ஜூலை 17: தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்துவரும் தொடா்மழையின் காரணமாக குற்றாலம் பேரருரவி, ஐந்தருவி,பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

பின்னா், புலியருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீா்வரத்து குறைவால் செவ்வாய்க்கிழமை தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

பழையகுற்றாலம் அருவியில் புதன்கிழமை நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கு 3ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழையும் குளிா்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT