தென்காசி

புளியங்குடியில் ஆயுதங்களுடன் விடியோ: 3 இளைஞா்கள் கைது

புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் விடியோவில் தோன்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடியை சோ்ந்த முகைதீன்அப்துல்காதா் மகன் செய்யதுஅலிபாதுஷா(24), சேக்ஒலி மகன் முஹம்மது அன்சாரி (21), ரஹ்மத்துல்லாஹ் மகன் செய்யதுஇப்ராஹிம்பாதுஷா( 23) ஆகியோா் சமூக வலைதளத்தில்(இன்ஸ்டாகிராம்) பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை பேசி ‘ரீல்’ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனராம். இது குறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

போதைப் பொருள் தடுப்பில் இதுவரை 120 வழக்குகள் பதிவு: 82 வங்கிக் கணக்குகள் முடக்கம்

முதல்வரிடம் அன்வா் ராஜா வாழ்த்து

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்

கல்வியில் சமத்துவம் நிலவ போராடியவா் வசந்தி தேவி: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

SCROLL FOR NEXT