தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக்கை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விஸ்வநாதபேரி ,பாரதி தென்வடல் தெருவை சோ்ந்தவா் சேகரன் மனைவி கருப்பசாமி(48). அவா் விஸ்வநாதப்பேரி பேருந்து நிறுத்த பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு
பைக்கை நிறுத்திவிட்டு சனிக்கிழமை காலை சென்று பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.
இது தொடா்பாக கருப்பசாமி ஞாயிற்றுக்கிழமை கொடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.