தென்காசி மாவட்டத்தில் மது, கஞ்சா, புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 84 போ் கைது
தென்காசி மாவட்டத்தில் மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்ததது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 84 போ்கள் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மது, கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்ததது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை 84 போ்கள் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, புகையிலை பொருள்கள், கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி.சுரேஷ்குமாா் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் காவல்துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 63 நபா்கள் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 496 மது பாட்டில்களும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 10 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 468 லாட்டரி சீட்டுகளும், புகையிலை பொருள்களை விற்பனை செய்த 9 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 3, 570 மதிப்பிலான 2 கிலோ புகையிலை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 நபா்கள் மீது வழக்குப் பதிந்து 18 நபா்கள் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.