ஓடையில் கட்டட இடிபாடுகளை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை
ஓடையில் கட்டட இடிபாடுகளை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய குளத்திற்கு செல்லும் ஓடையில் கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு செல்லும் ஓடையில் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம்போ் பயன்படுத்தும் சாலையில் உள்ள இந்த ஓடையில், கழிவுகள் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குளத்திற்குச் செல்லும் ஓடையில் தற்போது கட்டட இடிபாடுகளைக் கொட்டி வருகின்றனா். இதனால், நீா்வழிப் பாதை சுருங்கி, மழைக் காலங்களில் இயல்பான நீரோட்டம் தடைபட்டு ஊருக்குள் மழைநீா்புகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, பெரியகுளத்திற்குச் செல்லும் நீா்வழிப் பாதையாக இருக்கும் ஓடையில், கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதைத் தடுக்கவும், ஏற்கெனவே கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தவும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.