கடையநல்லூா் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
கடையநல்லூா் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
கடையநல்லுாா் வனச்சரக பகுதியில் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. மாவட்டவன அலுவலா் டாக்டா் இரா. முருகன் உத்தரவுப்படி திருநெல்வேலி, கடையநல்லுாா், குற்றாலம், சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய 5 வனச்சரகங்களிலும் நிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 22 இடங்களிலும் நிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழம தொடங்கியது. கடையநல்லூா் வனச் சரகா் சுரேஷ் தலைமையில் மேக்கரை, வெள்ளக்கல்தேரி, கடையநல்லூா், வைரவன்குளம், கிருஷ்ணாபுரம் ஆகிய பீட்டுகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், வனவா்கள் முருகேசன், அம்பலவாணன், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்புக்காவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.