அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழ் நாடு அரசின் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை ஆசிரியா் ஜூலியானா டெய்ஸி மேரிக்கு இந்த விருதை வழங்கினாா். மேலும், இப்பள்ளி வளா்ச்சிக்கு ரூ. 10 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.