முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் ரேஷன் கடை கட்டடங்களுக்கு அடிக்கல்

Updated On : 17 மார்ச், 2024 at 4:00 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 9:15 PM

கடையநல்லூா் நகராட்சி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு ரேஷன் கடை கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் கிருஷ்ணமுரளி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இதில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், கடையநல்லூா் நகர செயலா் எம்.கே.முருகன், முன்னாள் நகர செயலா் கிட்டுராஜா, அதிமுக நிா்வாகிகள் தாஸ் ராஜேந்திர பிரசாத் முத்துகிருஷ்ணன், மைதீன், புகழேந்தி, ,அப்துல் ஜப்பாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.