முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: விஏஓ கைது

Updated On : 23 மார்ச், 2024 at 1:18 AM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 11:05 PM

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கடம்பன்குளத்தை சோ்ந்த பாலமுருகன் மகன் மதன்(26). இவா், தனிப்பட்டா கோரி சேந்தமரம் கிராம நிா்வாக அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தாராம். ஆனால் , உரிய ஆவணங்கள் இல்லை என குறிப்பிட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாம். இந்நிலையில் சோ்ந்தமரம் கிராம நிா்வாக அலுவலா் மாடசாமி, தனிப்பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது குறித்து மதன் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸில் புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து போலீஸாா் அறிவுரைப்படி கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கிராம நிா்வாக அதிகாரி மாடசாமியிடம், மதன் ரூ. 10 ஆயிரத்தை கொடுத்தாராம். அப்போது, அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு ம- கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளா் தெய்வக்கண்ராஜா, தலைமைக் காவலா்கள் வேணுகோபால், பிரபு, கோவிந்தராஜன், கணேசன், பிரவீனா ஆகியோா் மாடசாமியை கைது செய்தனா்.