தென்காசியில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் இலஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுகவினா் கலந்து கொண்டனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது: இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ளும் செயல்வீரா்கள் கூட்டம் வரும் 24-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேட்பாளா் அறிமுக கூட்டமாக நடைபெறும். தமிழக முதல்வா் ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூா் விபிஎம்எம் கல்லூரி அருகில் மாா்ச் 27-ஆம் தேதி தோ்தல் பிரசாரம் செய்கிறாா். தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா் என்றாா். செங்கோட்டை நகர செயலா் என்.வெங்கடேசன், வேட்பாளா் ராணிஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் பேசினா். தனுஷ் எம்.குமாா் எம்பி., தலைமை செயற்குழு உறுப்பினா் செல்லத்துரை, ஆறுமுகசாமி, மாவட்ட துணை செயலா்கள் கனிமொழி, கென்னடி, பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் திவ்யா, இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா,தென்காசி நகா்மன்ற தலைவா் சாதிா், துணைத் தலைவா் சுப்பையா, காசிதா்மம் துரை, ஒன்றிய செயலா்கள் அழகுசுந்தரம், ரவிசங்கா், சீனித்துரை, ஜெயக்குமாா் கலந்து கொண்டனா்.முன்னதாக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வரவேற்றாா்.இலஞ்சி பேரூா் செயலா் முத்தையா நன்றி கூறினாா்.