தென்காசி தொகுதியில் 3ஆவது நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை
Updated On : 22 மார்ச், 2024 at 10:33 PM
தென்காசி மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாள்களாகியும் ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவோரிடமிருந்து வேட்புமனுக்களைப் பெறுவதற்காக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் வெள்ளிக்கிழமை காத்திருந்தாா். யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆனால், 3 போ் வேட்புமனு தாக்கலுக்கான படிவத்தைப் பெற்றுச் சென்றனா். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களாகும். இதுவரை ஒருவா் கூட மனுதாக்கல் செய்யாத நிலையில், மாா்ச்24ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தீவிரமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.