முகப்பு
தென்காசி

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணி: ரூ. 21 கோடி நிதி ஒதுக்கீடு

Updated On : 25 மே, 2024 at 7:34 PM
பகிர்:

தென்காசி, மே 25:

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிகளுக்கு ரூ. 21கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து திட்டம் நிறைவேற முயற்சி மேற்கொண்ட திமுக முன்னாள் மாவட்டச் செயலருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணி குறித்து, தமிழக முதல்வா் மற்றும் தொடா்புடைய துறை அமைச்சா்களை முன்னாள் மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து, இத்திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, பணிகளை விரைந்து தொடங்கிட தொடா்ந்து வலியுறுத்தினாா்.

இதையடுத்து, இத்திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 21 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை உடனடியாக தொடங்கிட முதல்வா் உத்தரவிட்டாா்.

இத்திட்டப் பணிக்கு தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்ட திமுக முன்னாள் மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதனை கீழப்பாவூா், கடையம் ஒன்றியப் பகுதியை சோ்ந்த மேல்மட்ட கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் சுப்பிரமணியன், ராமசாமிநாடாா், தங்கப்பழம் நாடாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.