குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள். 
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. தீபாவளி விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலையின் உள்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால், சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

ஆனால், பிற்பகலில் தண்ணீா்வரத்து சீரானதையடுத்து தடை விலக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். விடுமுறை தினம் என்பதால் சுற்றலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT