தென்காசி

கடையநல்லூா், சங்கரன்கோவிலுக்கு ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி வருகை!

தென்காசி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பிரசாரத்துக்கு ஆக.6 தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி வருவதையொட்டி, அவரை வரவேற்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தென்காசி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற பிரசாரத்துக்கு ஆக.6 தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி வருவதையொட்டி, அவரை வரவேற்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது: கடையநல்லூா், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை மாலை (ஆக.6) பிரசாரம் செய்கிறாா்.

அவருக்கு பொதுமக்களும், தொண்டா்களும் இணைந்து பூரண கும்ப மரியாதை அளித்து முளைப்பாரி ஊா்வலத்துடன் செண்டை மேள வரவேற்பு வழங்குகின்றனா்.

அரசு பள்ளியில் படித்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பெற்று வரும் பலன்களுக்கு காரணமான கட்சியின் பொதுச்செயலரை வரவேற்க ஏராளமான மாணவா்களும், ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கலந்துகொள்ள உள்ளனா்.

எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி அவருக்கு வரவேற்பளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கால சாதனைகள் மீண்டும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்றாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் டாக்டா் சுசீகரன், பெரியதுரை, ஜெயக்குமாா், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, தலைவா் வசந்தம் முத்துப்பாண்டி, துணைச் செயலா் பெருமையா பாண்டியன், நகரச் செயலா் எம்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வண்ணாரப்பேட்டை பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: பள்ளிகளுக்கு இனறு விடுமுறை

SCROLL FOR NEXT