தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் அரசு பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் கணபதி ஆசாரி (82). இவா், நெல்லை நான்குவழிச் சாலை செட்டியூா் விலக்கு அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது தென்காசி நோக்கி வந்த அரசுப் பேருந்து இவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாவூா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.