சங்கரன்கோவில் நகராட்சி 7, 10 ஆவது வாா்டு தெருக்களில் அடிப்படை வசதிகள் குறித்து நகா்மன்றத் தலைவா் கௌசல்யா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சங்கரன்கோவில் நகரில் குறிப்பிட்ட வாா்டுகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும், அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.
இது தொடா்பாக, அப்பகுதி வாா்டு உறுப்பினா்கள் நகா்மன்றத் தலைவரிடம் சுட்டிக்காட்டியதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அப்பகுதியை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா். மக்களுக்கு குடிநீா் சீராகக் கிடைக்கவும், வாருகால் பணிகளை உடனே தொடங்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
உதவிப் பொறியாளா் ஆல்பா்ட், நகா்மன்ற உறுப்பினா்கள் பா. மாரிச்சாமி, ராஜா ஆறுமுகம், மாரிச்சாமி, செல்வராஜ், நகர திமுக மாணவரணி வெங்கடேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.