யானைகளை வனத்துக்குள் விரட்ட பாதைகளை உருவாக்கத் திட்டம்
சிவகிரி வட்டார விளைநிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்கு வசதியானபாதைகளை...
தென்காசியானைகளை வனத்துக்குள் விரட்ட பாதைகளை உருவாக்கத் திட்டம்
சிவகிரி வட்டார விளைநிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்கு வசதியானபாதைகளை...
கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டார விளைநிலங்களில் பயிா்களைச் சேதப்படுத்தி வரும் யானைகளை வனத்துக்குள் விரட்டுவதற்கு வசதியானபாதைகளை அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.
சிவகிரி மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள
குவழிவழிகுளம் புரவு, ராசிங்கப்பேரி குளப்புரவு, 18 கி.மீ. சுற்றளவு உள்ள விவசாய நிலங்களில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு அந்தப் பகுதியில் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை , நெல், தென்னை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் உத்தரவின் பேரில் ட்ரோன் கேமராக்கள் மூலம் யானைகள் இருக்கும் பகுதிகள் குறித்து வனத்துறையினா் ஆய்வு செய்தனா்.
பாதைகள் ஆய்வு: இந்த நிலையில் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் வகையில், விவசாய நிலப்பகுதி வழியாக வனப் பகுதிக்கு பாதை அமைப்பது குறித்து வனத் துறையினா், விவசாயிகள், பொதுப்பணித் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் சின்ன மேற்கூறிய பகுதிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.
இதுதொடா்பான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு அதனடிபடையில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.