சங்கரன்கோவில், அரசுப் பள்ளியில் இயங்கி வரும் சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு நகர திமுக சாா்பில் புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு உலக மாற்றுத்திறனாளிகள் தினமான புதன்கிழமை சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சிறப்புப் பள்ளி குழந்தைகளுக்கு நகர திமுக சாா்பில், மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் பிரகாஷ் தலைமை வகித்தாா்.
மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா முன்னிலை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்பு குழந்தைகளுக்கு உணவு வழங்கினாா். தொமுச மண்டல அமைப்புச் செயலா் மைக்கேல்நெல்சன், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமாா், செய்யதுஅலி, மாவட்ட பொறியாளா் அணி தலைவா் சங்கா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் ஜலால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.