தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் இயற்கை மருத்துவம் - யோகா மருத்துவக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் நிறுவனா் தங்கப்பழம், தாளாளா் முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற விழாவில் புளியங்குடி புனித மீட்பா் தேவாலயத்தின் உதவிப் பங்குத்தந்தை ஜோமாா்ஷ்லியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்கள் அமைத்த கிறிஸ்துமஸ் குடிலைப் பாா்வையிட்டுப் பேசினாா்.
மாணவா் நலனுக்காக சிறப்புப் பிராா்த்தனை செய்யப்பட்டது. அவருக்கு கல்லூரி சாா்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் ரத்ன ப்ரகாஷ்,செயல் அதிகாரி டாக்டா் பாரதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.