ஆலங்குளம் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ஆலங்குளம், அண்ணா நகா், ரட்சண்யபுரம், நல்லூா், சீவலசமுத்திரம், கருவந்தா, ஊத்துமலை, அடைக்கலபட்டணம் சேகரங்களுக்கு உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனையும், சேகர தலைமை இடங்களில் திருவிருந்து ஆராதனையும் நடைபெற்றன. இதில் கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டு பிராா்த்தனையில் ஈடு பட்டனா்.