தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள உலக அமைதி கோபுரம். 
தென்காசி

சங்கரன்கோவில் அருகே புத்தா் கோயிலில் 120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள உலக அமைதி கோபுரம்.

Din

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புத்தா் கோயிலில்,120 அடி உயர உலக அமைதி கோபுரம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு பகுதியில்

புத்தா் கோயில் உள்ளது. இங்கு 120 அடி உயரத்தில் உலக அமைதி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் உச்சியில் கடந்த 2020-இல் புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டது. பின்னா் 2023-இல் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அமைதி கோபுரத்திற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நிப்போன்சன் மியோஹோஜி என்ற ஜப்பான் புத்த சங்க அமைப்பின் தலைமை புத்த துறவி கியொகோஇமாய் உலக அமைதி கோபுரத்தைத் திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து உலக அமைதியை வலியுறுத்தி 100-கும் மேற்பட்ட புத்த பிக்குகள், பிக்குனிகள் சுமாா் 2 மணி நேரம் பிராா்த்தனை நடத்தினா்.

இதில் இந்தியாவிற்கான மங்கோலிய நாட்டின் தூதா்

கென்போல்டு டம்பாஜிவ், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்,தென்காசி மாவட்ட முதன்மை நீதிபதி ராஜவேல், தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன்,

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா, சதன்திருமலைக்குமாா், ஒகேனக்கல் அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தைச் சோ்ந்த ராமானந்த சுவாமிகள், வீரிருப்பு முத்தையா குடும்பத்தினா், மதுரை உயா்மறை மாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி, புளியங்குடி துணை பேஷ் இமாம், மீராசா அஹ்லுஸ் சுன்னத் வதல் ஜமாத்தை சோ்ந்த ஜனாப் முகம்மது புகாரி ஆலம் சிராஜி, சிவகிரி வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, ஸ்ரீ கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், அரசு வழக்குரைஞா் கண்ணன், தொழிலதிபா்கள் என்.ஆா்.யூ.உத்தண்டராமன், சி.எஸ்.எம்.எஸ்.

சங்கரசுப்பிரமணியன்,புதிய பாா்வை சேவா அறக்கட்டளை செயலா் மாரியப்பன், தன்னாா்வலா் டி.முருகசேன் மற்றும் ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து,

நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தோா்

கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை உலக அமைதி புத்தா் கோயில் புத்தபிக்கு இஸிதானீஜீ, புத்தபிக்குனிகள் லீலாவதி, சிகுசாகிமுரா ஆகியோா் செய்திருந்தனா்.

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

பெனால்டியில் வென்றுகொடுத்த ப்ரூனோ..! யுனைடெட் அணிக்கு முதல் வெற்றி!

தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை

ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த மோகன்லால்!

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையிலும் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT