முகப்பு
தென்காசி

வெங்காடம்பட்டியில் ரூ.22.60 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:49 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 7:17 PM

வெங்காடம்பட்டி ஊராட்சியில் ரூ. 22.60 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

வெங்காடம்பட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் ரூ.12 லட்சத்திலும்,

கோவிலூற்றில் ரூ.5.60 லட்சத்திலும், மயிலப்பபுரத்தில் ரூ.5 லட்சத்திலும்

Advertisement

சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடக்க விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

கீழப்பாவூா் பேரூா் திமுக செயலா் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் இட்லி செல்வன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.