தென்காசி

குற்றாலம் பேரருவியில் 7ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆா்ப்பரித்த தண்ணீா்.

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 7ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் தடாகத்தில் சீறிப் பாய்கிறது. இதனால் வெள்ளிக்கிழமை 7ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலியருவி, சிற்றருவியில் குளிக்கத் தடை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் இங்கு உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

வெள்ளிக்கிழமை நாள்முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், இதமான சாரல் மழையும்,குளிா்ந்த காற்றும் வீசியது.

இருப்பினும், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் பாரபட்ச நடவடிக்கை: ரஷிய அதிபா் புதின் கண்டனம்!

‘எஜுகேட் கோ்ள்ஸ்’ இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

டிஸ்மெனோரியா-தவணை தவறாத வேதனை!

தனி வழிகளை மாணவா்கள் காணவேண்டும்: ஸ்ரீஹரிகோட்டா மைய இயக்குநா் பத்மகுமாா்!

SCROLL FOR NEXT