ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் விழும் தண்ணீா் 
தென்காசி

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

Din

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் வனப்பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்

இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலத்தில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து புலியருவி, சிற்றருவியிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பிரதான அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டதால் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான வெயிலும், சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. இருப்பினும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

SCROLL FOR NEXT