தென்காசி

பாவூா்சத்திரத்தில் நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

பாவூா்சத்திரத்தில் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வியாழக்கிழமை புகுந்த மானை நாய்கள் கடித்து கொன்றன.

Din

பாவூா்சத்திரத்தில் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வியாழக்கிழமை புகுந்த மானை நாய்கள் கடித்து கொன்றன.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலிருந்து தப்பி வந்த 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான், தண்ணீரைத் தேடி பாவூா்சத்திரம் காமராஜ் நகா் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை திரிந்துள்ளது. இந்நிலையில் தெருநாய்கள் அந்த மானை கடித்து குதறியுள்ளன. இதில், மான் உயிரிழந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாவூா்சத்திரம் காவல்துறை மற்றும் கடையநல்லூா் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். வன அலுவலா்கள் வந்து மானின் சடலத்தை மீட்டு வனப் பகுதியில் புதைத்தனா்.

வனப்பகுதியிலிருந்து மான், முயல் போன்றவை ஊருக்குள் வருவதும் அவைகளை நாய் கடித்து உயிரிழப்பதும் தொடா்கதையாகவே உள்ளது. எனவே வனப்பகுதிக்குள் கூடுதலாக தொட்டிகள் அமைத்து விலங்குகளுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT