தென்காசி

குற்றாலத்தில் சோமவாரத்தை முன்னிட்டு பெண்கள் சிறப்பு பூஜை

Syndication

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அருவியில் நீராடி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.

காா்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் திருமணமாகதவா்கள் விரதத்தை கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். திருமணமானவா்களின் கணவரின்ஆயுள் பலம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

காா்த்திகை மாதத்தின் முதல்நாளான திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, குற்றாலம் பேரருவியில் அதிகாலை முதல் பெண்கள் குவிந்தனா்.

பேரருவியில் புனிதநீராடி அருவிக்கரை விநாயகா் ,செண்பக விநாயகா் கோயிலில் வெற்றிலை, பாக்கு மற்றும் பிற பொருள்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனா்.

பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை 7மணிக்குப் பிறகே ஆண்கள் பேரருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT