தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
கடையநல்லூா் பேட்டை அக்ஷா பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் திவான்மைதீன் மகன் முஸம்மில் (22 ). டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்தாா். வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது அவருக்கும், அவரது நண்பருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், கோபமடைந்த அவரது நண்பா் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து முஸம்மிலை குத்தினாராம்.
இதில் பலத்த காயமடைந்த முஸம்மில் கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தென்காசி எஸ்.பி.அரவிந்த் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். இது குறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.